வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்தாவது ஜெயிக்க வேண்டும்….. சிவசேனா எம்.பி சஞ்செய் ராவத் கருத்து…!!

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக சிவசேனா எம்.பி சஞ்செய் ராவத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையாகுமார் நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.அவருக்கு எதிராக சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் ‘ரோக் தோக்’ என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுரை ஓன்று வெளியானது. இதில், கன்னையா குமார் ஒரு விஷம் என்றும் , அவரை கட்டாயமாக நாடாளுமன்றத்துக்குள் விடக் கூடாது என்றும் , வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்தாவது அவரை தோற்கடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

தேர்தல் ஆணையம் க்கான பட முடிவு

 

சாம்னாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்தை விதி மீறப்பட்டுள்ளதாக சாம்னா ஆசிரியர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு  நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.இது குறித்து மும்பை நகர கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவாஜி ஜோந்தலே அனுப்பியுள்ள அறிக்கையில் , சஞ்சய் ராவத் கூறி இருக்கும்  கருத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதுள்ள நம்பிக்கையை குறைப்பதாகவும், தேர்தல் நடைமுறையை மண்ணாக்குவது போல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.