“எந்த மொழியாக இருந்தாலும் விருப்ப பாடமாக இருக்க வேண்டும்” சித்தராமையா ட்விட்..!!

தாய்மொழி அல்லாத எந்த மொழியாக இருந்தாலும் அது விருப்ப பாடமாக இருக்கவேண்டும்  என்று கர்நாடக முன்னாள் முதல்வர்  சித்தராமையா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றவுடன் கஸ்தூரி ரங்கன் குழு தேசிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தது. இதையடுத்து மாநில கல்விகளில் தாய்மொழி மற்றும் ஆங்கில மொழியை பயிற்று விக்கும் வகையிலுள்ள இரு மொழி கொள்கைக்குப் பதிலாக ஹிந்தியை சேர்த்து மும்மொழி கொள்கையை நடைமுறை படுத்தலாம் என சர்ச்சை எழுந்து வருகிறது. இதற்க்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

Image result for Siddaramaiah

இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா , கல்வியில் தாய்மொழி அல்லாத எந்த மொழியாக இருந்தாலும் அது விருப்ப பாடமாக இருக்கவேண்டுமே தவிர, திணிக்கப்பட கூடாது மற்ற மொழி திணிக்கப்படும் போது குழந்தைகளின் படிப்பாற்றல் திறன் பாதிக்கும்” என்று  ட்வீட் செய்துள்ளார்.