தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மற்றும் அதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுத்தத முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் தற்போது தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் தலைமைச் செயலாளர்,  உள்துறை செயலாளர், டி.ஜே.பி, ஏடிஜிபி, ஏடிஜிபி உளவுத்துறை, பள்ளிக் கல்வி,  உயர் கல்வித் துறை செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பள்ளி – கல்லூரிகளில் இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களிடம் உள்ள போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம்  ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கனவே இலங்கை இருந்து ஒரு போதை பொருள் கும்பல் தப்பித்து தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும் தகவல் வந்துள்ள நிலையில் முதலமைச்சர் இந்த ஆலோசனையை நடத்தி வருகிறார்.

போதைப் பொருள் மிகப்பெரிய சுகாதார பிரச்சனையை மற்றும் உடல் நலம் சார்ந்த பிரச்சனையை ஏற்படுத்தும். தமிழகத்தில் பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி சில பெட்டி கடைகளிலும், பெரிய கடைகள் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதை எல்லாம் எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.