சென்னை சென்ட்ரலில் வேற லெவல் மாற்றம்…. இனி டிராபிக் பேச்சுக்கே இடமில்லை….. CUMTA போட்ட பக்கா பிளான்…!!!!!

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது தான் அதன் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழ மத்தின் தலைவராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான அறிவுரைகளை வழங்கியதோடு திட்டங்களை செயல்படுத்துமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி சீரான போக்குவரத்தை அமைப்பதற்கு தற்போது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, மோர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் போன்றவைகள் அருகருகே அமைந்துள்ளதால், இந்த பகுதிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து செல்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதன் காரணமாக சென்ட்ரலை ஒட்டியுள்ள பகுதிகளில் முறையான ஆய்வு செய்து போக்குவரத்தை சீரமைப்பதற்கு ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. அதன் பிறகு ரிப்பன் சிக்னலில் இருந்து நார்த் போர்ட் சாலைகள் சரியான முறையில் இல்லை.

ஆனால் இந்த பகுதியில் பேருந்து நின்று பயணிகளை ஏற்றி செல்லும் அளவுக்கு போதிய வசதி இருக்கிறது. இதை பேருந்துகள் முறையாக பயன்படுத்துகிறதா? அல்லது வேறு ஏதேனும் வாகனங்கள் ஆக்கிரமித்து செல்கிறதா போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்து முறையான அறிக்கை தயார் செய்து முதல்வரிடம் அனுமதி பெற்ற பிறகு திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும்பத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Leave a Reply