காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்….. நாளை அறிவிக்கப்படுமென்று அழகிரி பேட்டி…!!

காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுமென்று நாளை அறிவிக்கப்படுமென்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று  இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

Image result for காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில் , திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது . திமுக சார்பில் எந்தெந்த தொகுதிகளில் நாங்கள் போட்டியிட போகின்றோம் என்று திமுக அறிவிக்கும் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.