பகாசுரன் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், அண்ணாமலையை கைய கட்டி கொண்டு வந்து 100 வாட்டி இந்த படத்தை காட்ட வேண்டும் என்று நான் சொல்கிறேன். துபாய் ஹோட்டல் வீடியோ ஏதோ இருக்குன்னு சொல்லி மிரட்டிக்கிட்டு இருக்காங்க. அப்படி இருக்கும் பொழுது இது என்ன ? ஏதுன்னு ? நீங்க போலீஸ் தான் ஆக்சன் எடுக்கணும். ஆனால் அவர் ஒரு பெரிய தலைவரா இருக்கிறதால சில விஷயங்கள் தாமதமாகிறது ஏன் என தெரியல ?

எனக்கு பாஜகவில் இருக்க கூடிய பெண்கள் ஆதரவு தெரிவிக்காததை நீங்க அவங்க கிட்ட தான் கேட்கணும். குஷ்பு மேடம் கிட்ட கேளுங்க, வானதி அக்கா கிட்ட கேளுங்க. எத்தனையோ பெண் லீடர் இருக்கிறார்கள், சசிகலா புஷ்பா இருக்குறாங்க, அவர்களிடம் போய் கேளுங்க. நான் கேட்பது, நான் குரல் கொடுத்தது டெய்சி அவர்களுக்கு, அலிஷா  அவர்களுக்கு, எனக்கும் நான் சேர்த்து கொடுத்து இருக்கேன்.

அலிஷா அப்துல்லா கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க, ஆக்சன் எடுப்பாங்க என் தலைவர் அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. என்ன ஆக்சன் எடுத்தார்கள் ? கட்சியிலிருந்து ஏற்கனவே சஸ்பெண்ட் ஆகி இருக்காங்க. என்ன ஆக்ஷன் எடுத்தாங்க. போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்தார்களா ?  இல்ல.

பகாசூரன் அருமையான படம். அதாவது ஒரு ஃபேமிலி எல்லாமே போய் பார்க்க வேண்டிய ஒரு படம். அதாவது என்னவென்றால் ஒரு பெண் எப்படி சுதந்திரமா இங்க இருக்க முடியும்? எவ்வளவு சுதந்திரமா இருக்க முடியும் ? வீட்ல என்ன சொல்லி வளர்கிறார்கள் என்றால் ? ஒரு பெண் வந்து ஒழுக்கமா வளரணும், அப்படின்னு தான் சொல்றாங்க. வெளியில் உலகம் சரி இல்லன்னு சொல்றாங்க. ஆனால் ஆண்கள் ஒழுக்கமாக வளர்க்கணும் அப்படின்றது ஒரு விஷயம்  சொல்றதே இல்லை என தெரிவித்தார்.