விளம்பர மேனியா நோயால் பாதிக்கப்பட்ட அண்ணாமலை… நெல்லை முபாரக் கிண்டல்…!!

தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது.  தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை.

ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது,  ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக,  பாராளுமன்ற பிரதிநிதிகளாக நேரடியாக அதிமுக உடைய முதுகில் ஏறாமல்  நேரடியாக நின்று வெற்றி பெற முடியுமா ? தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மோடிக்கு தமிழ்நாட்டில பெரிய வரவேற்பு இருக்குன்னு சொல்றீங்களே..

தமிழ்நாட்டில் பிஜேபி நாங்க கூட்டணியில்லாமல் தனித்து களமாட போகிறோம் என்று சொல்கின்ற அருகதை அண்ணாமலை அவர்களுக்கு இருக்கிறதா ?  என்று சொன்னால் இல்லை. யாராவது ஒரு கட்சி உடைய முதுகில் ஏறிட்டு,  எங்களுக்கு தமிழ்நாட்டில் மரியாதை இருக்கிறது என்று சொல்வதெல்லாம் பொய்யானது. நான் ஏற்கனவே சொன்னது போல ஒரு விளம்பரமோனியா நோயால் அண்ணாமலை பாதிக்கப்பட்டிருக்கிறார் என விமர்சனம் செய்தார்.

Leave a Reply