விஜய்யின் “தளபதி 64” யில் அனிருத் … மிரட்டி வரும் படக்குழு ..!!

விஜய்யின்  அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது  .

இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் . மேலும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்நிலையில் ,  இந்த படத்திற்கு பின்பு தளபதி விஜய் “மாநகரம்” படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

Image result for thalapathy 64

தற்போது , இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது . குறிப்பாக, இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்க உள்ளார் .இதனால் தளபதி 64 படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது . தற்போது இந்த படத்திற்கு “தளபதி 64” என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கி 2020 ஏப்ரலில் படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளது.