வேலூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில்திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார்.
வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் அவர்கள் முதற்கட்டமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.

ஆனால் அந்த சந்தோஷம் சிறிது நேரம் கூட நிலைத்து நிற்காமல், வாக்கு எண்ணிக்கையின் திடீர் திருப்பமாக கதிர் ஆனந்த் 7,058 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். அதன்பின் சற்றும் தொய்வில்லாமல் சீறிப்பாய்ந்த திமுக தொடர்ச்சியாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
இறுதியாக 3 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ண படவேண்டிய நிலையில் அரசியல் களத்தில் பரபரப்பு அதிகரித்து. ஆனால் அனைத்து தடைகளையும் தாண்டி சரசரவென அதிகரித்த வாக்குகளால் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அபார வெற்றி பெற்றார். இவரது வெற்றியை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.