அங்கு குளிக்க கூடாது…. அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்…. சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு….!!

அணைமேடு நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிப்பதற்கு அதிகாரிகள் தடையினை விதிக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் சரபங்கா நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் போது ஆற்றின் கரைகள் சேதமடைவதை தவிர்ப்பதற்காக கழுங்கு எனப்படும் தடுப்புச்சுவர் கற்களாலான அணை மேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே மழை நீர் பெருக்கெடுத்து வரும் காலங்களில் இந்த கழுங்கின் வழியே நீர்வீழ்ச்சியாக தண்ணீர் கொட்டும். அவ்வாறு கொட்டும் தண்ணீர் சிறிது தூரம் கிளை ஆறாக பெருக்கெடுத்து சென்று மீண்டும் சரபங்கா நதியில் கலக்கும் வகையில் பண்டைய காலத்தில் வெள்ளத்தடுப்பு பாதுகாப்பாக ஏற்படுத்தப்பட்டது.

எனவே இவ்வாறு அமைக்கப்பட்ட அணை மேடு கழுங்குவில் தொடர் மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து அருவி போன்று கொட்டுவதை பெரும்பாலானோர் கண்டு மகிழ்வர். அதிலும் குறிப்பாக வெள்ளக்காலங்களில் அணை மேடு நீர்வீழ்ச்சி போன்று கழுங்கை தாண்டி தண்ணீர் கொட்டுவது அழகான காட்சியாக இருக்கும். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணை மேடு நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் கொட்டுகிறது. ஆனால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அங்கு குளித்து வருகின்றனர். ஆகவே பொதுமக்கள் அங்கு குளிப்பதற்கு அதிகாரிகள் தடை விதித்து அவர்களை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *