அங்கன்வாடிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும்… ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி அருகே அத்தி கடையில் அங்கன்வாடி ஊழியர்கள், அங்கன்வாடிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாரத் தலைவர் கலைமாமணி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசி உள்ளார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் அங்கன்வாடிகளில் சமையல் பணிகளுக்காக வழங்கப்படும் எரிவாயு சிலிண்டருக்கான தொகை ரூ.1025 முழுமையாக வழங்க வேண்டும். பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாகவும் குறு மையங்களை பிரதான அங்கன்வாடிகளோடும் இணைப்பதை கைவிட வேண்டும். அதேபோல் அங்கன்வாடிகளுக்கு மின் கட்டணத்தை அரசை நேரடியாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.