ஆங் சான் சூச்சி மீண்டும் ஒடுக்கம்… போராட்டத்தில் பெரும் பதற்றம்…!!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் தீவிர போராட்டத்தில் இறங்கி உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மியன்மாரில் கடந்த ஆண்டு நம்பர் மாதம் ஆங் சாங் சூச்சி என்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் 83 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது . ஆனால் மியான்மாரில் ஆங் சாங்  சூச்சி நடத்திய தேர்தலில் முறைகேடு இருப்பதாக கூறி ராணுவத்தால் ஆட்சி வீழ்த்தப்பட்டு  ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார்கள் . ராணுவ ஆட்சியை பிடிக்காத மக்கள் அவர்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வந்தனர் இந்நிலையில் ராணுவம்  விதித்த தடையை மீறி மக்கள் போராட்டத்தை நடத்தி வருவதால் அடக்கு முறை என்ற பெயரில் ராணுவம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால்  பல மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஒரு மாதமாக நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் மியன்மாரின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். யாங்கோனில்  ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீஸார் கையெறி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை உபயோகித்துள்ளனர். மேலும் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டின் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்கள் .அந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று ரைட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஐ .நா மனித உரிமை சட்டம் இறந்தவர்களை  கணக்கெடுப்பை நடத்தியது . மேலும் கடுமையான இந்த அடக்குமுறையை தடுப்பதற்காக ஐக்கிய நாடு சபை மற்றும் சர்வதேச அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளது. “தேர்தல் மூலம் வெளியிடப்பட்ட மியன்மார் மக்களின் கருத்தை நாம் மதிக்க வேண்டும்”. ஆகவே இந்த அடக்கு முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடு பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் மூலம் ராணுவத்திற்கு ஒரு தெளிவான அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. என்று ஸ்டீபன் டுஜாரிக் என்ற  ஐ.நா செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.