ஆன்ட்ரெ ரஸ்ஸெல் அதிரடியில் வென்றது கொல்கத்தா அணி ….!!

ஐதராபாத் அணிக்கிடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பிஎல் தொடடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது . மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடந்து களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். பேர்ஸ்டோ 39 ரன்களில் ஆட்டமிழக்க தனது பங்குக்கு டேவிட் வார்னர் 85 ரன் எடுத்து ஆட்டமிழக்க , விஜய் சங்கர் களமிறங்கி தனது பங்குக்கு 40 (24) எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது.  கொல்கத்தா அணி தரப்பில்  ஆன்ட்ரெ ரஸ்ஷெஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் லின் , ரானா களமிறங்கினர். தொடக்கம் முதலே லின் 7 ரன்கள் அடித்த நிலையில் சாகிப் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா ராணாவுடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி ரன் குவித்தனர்.ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ராபின் உத்தப்பா 27 பந்தில் 35 ரன் எடுத்த போது கவுல் பந்தில் போல்ட் ஆகி வெளியேறிய அடுத்த சில பந்தில் 3_ஆவது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் சந்தீப் சர்மா பந்தில் 2 ரன் எடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

பின்னர் ஆட்டத்தை போக்கை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற நிதிஷ் ராணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 ரன் எடுத்து ரஷீத்கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் . பின்னர் ஆன்ட்ரெ ரஸ்ஸெல்_யும் ஷிஃப்மன் கில்_லும் இணைந்தனர். கொல்கத்தா அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆன்ட்ரெ ரஸ்ஸெல் ரன் மழை பொழிந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் சார்பில் ஆன்ட்ரெ ரஸ்ஸெல் 49(19)* ஷிஃப்மன் கில் 18(10)*  களத்தில் இறுதி வரை இருந்தனர். ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி சார்பில்  , சித்தார்த் கெளல்  , சாகிப் அல் ஹாசன்  , சன்தீப் சர்மா மற்றும் ரஷீத் கான் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனர்.