ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு..!!

முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.   

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி  தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியினர் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியினரை தாக்குவதாகவும்,  அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாகவும்  புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது.

Image result for Chandrababu Naidu, former Andhra Pradesh Chief Minister and Telugu Desam Party leader put under house arrest

இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் ஜெகன்மோகன் ரெட்டி அரசு வீட்டுக் காவலில் வைத்தது. ஆந்திராவில் நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு வீட்டுக்குச் செல்லமுயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களையும்  போலீஸ் கைது செய்துள்ளது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *