அனைத்து அரசு பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற்றம்…. மத்திய அமைச்சர வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தேசிய கல்விக் கொள்கை கடந்த 1968 ஆம் ஆண்டு முதன் முதலில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 42வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின்படி 1976 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வி பொது பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு கல்விக் கொள்கையானது திருத்தப்பட்டது. இதனைடடுத்து 1992 ஆம் ஆண்டு கல்விக் கொள்கை மீண்டும் திருத்தப்பட்டாலும் சில மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழுவினால் கல்வி கொள்கையில் மீண்டும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இறுதியாக 2020 ஆம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையை முழுமையாக நாட்டில் அமலுக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கட்சிணர் அரசியல் ரீதியான காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு உள்ளூர் மொழிகளில் பாடம் கற்பிக்கப்படும் என்றும் அரசு பள்ளிகளில் மழலையர் பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்சி பள்ளிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை வேண்டும் என துணை நிலை ஆளுநர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஆலோசனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.