ரஷ்யாவில் முதல் பலி வாங்கிய கொரோனா!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முதல் பலியாக ஒரு முதியவர் உயிரிழந்தார்.

சீனாவில் தொடங்கி 178  நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா-  3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால் சீன எல்லைகளை பகிரும் ரஷ்யாவில் இந்த கொடிய வைரசால் எந்தவித உயிரிழப்பும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் (Moscow) உள்ள மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 79 வயது முதியவர் பலியானார். இதனால் ரஷ்ய நாட்டில் கொரோனா வைரசால்  முதல் உயிரிழப்பு பதிவாகிவிட்டது. மேலும் அந்நாட்டில் சுமார் 200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.