“கடன் தொல்லை தாங்க முடியவில்லை” காப்பீட்டு நிறுவன முகவரின் விபரீத முடிவு…. காஞ்சியில் பரபரப்பு….!!!

கடன் தொல்லையால் காப்பீடு நிறுவன முகவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அச்சரப்பாக்கம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள காப்பீட்டு நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக புதிய பாலிசிதாரர் சேர்க்க முடியாமல் மோகன் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் போதிய வருமானம் இல்லாததால் தனக்கு சொந்தமான வீட்டை தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூபாய் 5 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் கடனை அடைக்க பல்வேறு இடங்களில் பணம் வாங்கியுள்ளார். அதோடு கடன் கொடுத்தவர்கள் மோகனுக்கு நெருக்கடி கொடுத்ததால் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சித்தாமூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.