“உரிய ஆவணங்கள் இல்லை” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் என்று கூறி வாலிபரிடம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் ஆரோக்கிய ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ஞானப்பிரகாசம் கடந்த 15ஆம் தேதி காரைக்குடியை சேர்ந்த ஒருவரிடம் ரூ 2.85 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் 2 பேர் தங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு ஞானப்பிரகாசத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் ஞானப்பிரகாசம் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து கொண்டு உரிய ஆவணங்களை கொடுத்து விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு கூறிவிட்டு சென்று விட்டனர்.

இதனையடுத்து ஞானப்பிரகாசம் காவல்நிலையத்திற்கு பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது பணியிலிருந்த காவல்துறையினர் தாங்கள் யாரும் சோதனை நடத்தவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஞானப்பிரகாசம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து பார்த்ததில் ஆலங்குடி பகுதியை சேர்ந்த பாலமுருகன், சரவணன் ஆகிய 2 பேர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் என்று கூறி பணத்தை பறிமுதல் செய்தது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *