அமோகமா ஓவியா திறந்து வச்ச…. நகைக்கடை அம்போனு போயிட்டு…. உரிமையாளர் எடுத்த முடிவு…!!

ஓவியா திறந்து வைத்த நகை கடையின் உரிமையாளர் குடும்பத்தோடு விஷம் குடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடை வீதியில் எஸ்விஆர் என்ற பெயரில் பலராமன் மற்றும் அவருடைய மகன் ஹரி என்பவர்கள் நகை கடை வியாபாரம் நடத்தி வந்தனர். இந்த கடை திறப்பு விழாவில் நடிகை ஓவிய கலந்து கொண்டு கடையை திறந்து வைத்துள்ளார். ஆடம்பரமாக திறக்கப்பட்ட கடை எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வராமல் இருந்துள்ளது. இதனால் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் நகைச் சீட்டு கட்டியவர்களுக்கு நகை கொடுக்க முடியாமல் உரிமையாளர் திணறறி வந்துள்ளார். இந்நிலையில் சீட்டு கட்டி ஏமாந்த மக்கள் சில தினங்களுக்கு முன்பு கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.

இதனால் அவமானம் அடைந்த பலராமன், அவர் மனைவி, மகன் ஹரி, மருமகள் மற்றும் ஹரியின் மகள் ஆகியோருடன் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஐந்து பெரும் லாட்ஜில் விஷம் குடித்து கிடந்துள்ளனர். இதை பார்த்த கார் டிரைவர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தற்போது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.