வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!!

வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையை  தனியார் மயமாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Image result for tamilnadu strike

இதனையடுத்து தொழிலாளர்கள் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் எனவும் மேலும் இந்த  முடிவுகளை  மாற்ற வேண்டும் என்றும்  முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இது குறித்து போலீசார் அவர்களிடையே பேச்சு வார்த்தையை மேற்கொண்டனர்.