சிவங்கையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சரவணன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் .விசாரணையில் முன்விரோதம் காரணமாக சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.