” அமமுக குக்கர் சின்னம் கிடையாது ” உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்….!!

அமமுக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுளள்து.

கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார் . அந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இலை சின்னம் ஒன்றுபட்ட அதிமுகவுக்கு என்று உத்தரவிட்டது . பின்னர்  இந்த தீர்ப்பை எதிர்த்து TTV தினகரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .

Image result for அமமுக குக்கர் சின்னம்

இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . இதையடுத்து சின்னம் தொடார்பான தீர்ப்பு வர தாமதமான சூழலில் தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டுமென்று TTV தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை  இன்று நடைபெற்ற போது பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான உரிய சட்ட விதிகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.