8 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த விளக்கு…. மெய்சிலிர்த்து நின்ற பக்தர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் பகல் 12 மணி முதல் அம்மனுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த காமாட்சி விளக்கு பிரகாசமாக எரிந்தது. ஒரு முறை மட்டுமே எண்ணெய் ஊற்றியுள்ளனர்.

சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக விளக்கு அணையாமல் எரிந்ததை அறிந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து விளக்கை அதிசயத்துடன் பார்த்து அம்மனை தரிசித்து சென்றனர். சிலர் தங்களது செல்போனில் விளக்கு பிரகாசமாக எரிவதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.