ராஜினாமா செய்தார் அமித்ஷா ..!!

பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அமித்ஷா தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்து கொண்டார் .

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை  அடுத்து, பாஜகவின் தேசியத் தலைவரான அமித்ஷா தனது மாநிலங்களவை பதவியை இன்று ராஜினாமா செய்தார் .அவரது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது .

மேலும் பாஜக சார்பில் புதிய மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதவியேற்றுக்கொண்டார். இதனை அடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி அவர்களும் தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை முன் சமர்ப்பித்தார். அவரது கடிதத்தையும் மாநிலங்களவை ஏற்றதை எடுத்து அவரும் ராஜினாமா செய்து கொண்டார்.