அவர் இங்க வந்தா சும்மா விடாதீங்க மக்களே…! “கேள்வி மேல கேள்வி கேளுங்க”…. அயோத்தியில் அமித்ஷா ஆவேசம்….!!!!

உத்திர பிரதேச தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் அயோத்தியில் ‘மக்கள் நம்பிக்கை யாத்திரை’ கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமித்ஷா காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டவை அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை தடுக்க பல முயற்சிகளை செய்து வருவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் அகிலேஷ் யாதவிடம் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன் ? என்ற கேள்வியை கேட்க வேண்டும்.

மதவாத நம்பிக்கைகளை மதிக்காத அரசுகள் தான் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள். ஆனால் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் மக்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே “மக்களாகிய நீங்கள் அகிலேஷ் யாதவ் இங்கு வந்தால் அவரை சும்மா விடாதீர்கள். கேள்விக்கு மேல் கேள்வி எழுப்புங்கள்” என்று அமித்ஷா ஆவேசமாக பேசியுள்ளார்.

அதேபோல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதில் என்ன சிரமம் உள்ளது என்றும் கேளுங்கள். ஒரு பக்கம் பிரதமர் மோடி தலைமையில் அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக எழும்பி வருகிறது. இன்னும் சில மாதங்களில் அயோத்தி கோயில் உருவாகி விடும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டவை ராமர் கோயிலை வர விடாமல் தடுக்கிறார்கள் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *