ராம்ஜெத்மலானி உடலுக்கு அமித்ஷா , வெங்கையா நேரில் அஞ்சலி….!!

மறைந்த மூத்த வழக்கறிஞ்சர் ராம்ஜெத்மலானி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர், துணை குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினர்.

மூத்த வழக்கறிஞரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். 95வயதான இவர் 1996 வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார்.

மறைந்த ராம் ஜெத்மலானி உடலுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேரில் அஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.