அமித்ஷா-கிருஷ்ணன், மோடி- அர்ஜுனன் ….. புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் …!!

அமித்ஷாவும் , மோடியும் கிருஷ்ணன் , அர்ச்சுனன் போன்றபவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இதில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

Image result for சூப்பர் ஸ்டார் அமித்ஷா

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் , காஷ்மீரை  இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது. நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது.அமித்ஷாவும் , மோடியும்  கிருஷ்ணன், அர்ச்சுனன் போன்றபவர்கள் இதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்று அவர்களுக்கே தெரியும் என்று நடிகர் ரஜினிகாந்த் அமித்ஷாவை பாராட்டினார்.