உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித்ஷா…!!

அமித்ஷா உள்துறை அமைச்சராக இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மக்களவை  தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன்  கேபினட் அமைச்சர்களாக  24 பேரும்,   தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாக 09 பேரும்,  ராஜாங்க அமைச்சர்களாக 24 பேரும் பதவி ஏற்றனர். இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கும்,  அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Image
அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு நேற்று துறைகள்  ஒதுக்கப்பட்டது. இதன்படி, பாஜக தேசிய தலைவராக இருக்கும் அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அமித்ஷா, இன்று முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதற்கு முன்னதாக, அலுவலகம் வந்த அமித்ஷாவை மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *