அமித்ஷா கருத்து…. ”ஆடி போன பாஜக”….. உலகளவில் எதிர்ப்பு…..!!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பாஜகவினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இந்தியாவின் பல மொழிகளுள் ஒன்றான இந்தி மொழி நாள் இன்று கொண்டாடப்படுகின்றது. இதற்காக இன்று காலை மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என்றும் , இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்திருந்தார்.

இது இந்தி திணிப்பிற்கான கருத்தாக உள்ளது என்று கருதிய பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தனர்.தமிழகம் சார்பில் ட்வீட்_டரில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான கருத்துக்கள் பதிவிடப்பட்டது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக #StopHindiImposition#StopHindiImperialism என்ற இரண்டு ஹாஷ்டாக் டீவீட்_டரில் தேசியளவில் ட்ரெண்ட் ஆகியது.

கூடவே சிறிது நேரத்தில் ஹிந்திக்கு போட்டியாக #தமிழ்வாழ்க என்ற ஹாஸ்டக்_க்கும் சேர்ந்து ட்ரெண்டாகியது. அதே போல இந்தி நாளை கொண்டாடும் வகையில் #HindiDiwas , #हिंदी_दिवस#HindiDay என்ற ஹாஷ்டாக்_கும் ட்ரெண்டாக்கின.இந்நிலையில் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துக்கள் அதிகளவில் பதிவிடப்பட்டதால் #StopHindiImposition என்ற ஹாஷ்டாக் உலகளவில் ட்ரெண்டாகியது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.