“அமீரகம் எங்களுக்கு அத்துபடி “….! நிச்சயம் வெற்றி பெறுவோம் – பாபர் அசாம் ….!!!

டி20 உலககோப்பை போட்டியில் வருகின்ற 24-ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

7-வது டி20 உலககோப்பை போட்டி வருகின்ற 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இப்போட்டி அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பாக அக்டோபர் 18-ஆம் தேதி பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ,இங்கிலாந்துடன் மோதுகிறது.

இதனிடையே டி20 உலகக்கோப்பை குறித்து  பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில்,” T 20 உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு அமீரகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருகிறோம். அங்குள்ள சீதோஷ்ண நிலைமை எங்களுக்கு அத்துபடி . இதனால் டி20 உலகக் கோப்பையை நிச்சயம்  வெல்வோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *