நோய் பரவல் அதிகரிப்பு…. மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி…. அமெரிக்கா அரசு அறிவிப்பு …!!!

அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர்  தடுப்பூசி செலுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட  நாடுகளில் அமெரிக்கா மிகவும் மோசமான நிலையில்  உள்ளது. அமெரிக்க நாட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனா பரவும் சூழலில் இருப்பவர்கள் என அனைவரும்  இரண்டு டோஸ்  தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனை அடுத்து மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு  சி.டி.சி  நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் டாக்டர் ரோட்ச் செல்வி கையெழுத்துப் போட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி அந்நாட்டில்  இருக்கும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் மேலும் இணை நோய்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்  தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர்  பூஸ்டர்  தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள   உறுப்பு மாற்றம் போன்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்,புற்றுநோயாளிகள் போன்றவர்களுக்கு  பைசர், மாடர்னா தடுப்பூசிகளை போடுவதற்கு  அமெரிக்கா முன்னரே ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *