“அடேங்கப்பா!”.. இவ்வளவு தொகையா..? ஜோபைடன் சுவிஸ் வந்ததற்கு செலவான தொகை..!!

சுவிட்சர்லாந்தில், ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிபர்களின் சிறப்பு சந்திப்பிற்கு செலவான மொத்த தொகை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் சுவிட்சர்லாந்திற்கு வந்திறங்கியவுடன் ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு வாய்ந்த Intercontinental ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். இந்த ஹோட்டலுக்கு இரவு நேர வாடகை 30 ஆயிரம் பிராங்குகள். மேலும் அதிபர் வரவிருப்பதால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பாதுகாப்பிற்காக 15,000 பிராங்குகள் செலவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாநாட்டிற்காக வந்த அதிகாரிகள் தங்குவதற்காக அமெரிக்க அரசு ஒரு மில்லியன் பிராங்குகள் செலவு செய்துள்ளது. மேலும் அமெரிக்காவை சேர்ந்த அதிகாரிகள் வாகனங்களின் வாடகை மட்டுமே 2.16 மில்லியன் பிராங்குகள் ஆகும். மேலும் இந்த மாநாடு குறித்து ஒளிபரப்பிய ஊடகங்களை சேர்ந்தவர்கள் தங்கியதற்கான கட்டணம், வாடகை வாகனம் மேலும் பிற செலவுகளுக்கு 8,08,000 பிராங்குகள் வழங்கப்பட்டது.

மேலும் இதில் சில பேர் Beau-Rivage என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அங்கு இரவு நேர கட்டணம் 1,60,000 பிராங்குகள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க அரசு பாதுகாப்பு அம்சங்களுக்காக 1.5 மில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது. மொத்தமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில மணி நேரங்கள் சுவிட்சர்லாந்தில் தங்கி சென்றதற்கு சுமார் 4 மில்லியன் பிராங்குகள் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *