இந்தியாவில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது?…. தொடர்ந்து கண்காணிக்கும் அமெரிக்கா…!!!

அமெரிக்கா, இந்திய நாட்டின் மத சுதந்திர நிலையை உன்னிப்பாக கண்காணிப்போம் என கூறி இருக்கிறது.

அமெரிக்க நாட்டின் சர்வதேச மத சுதந்திர ஆணையமானது, மக்கள் அவரவர் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க உலக நாடுகள் சுதந்திரம் அளிக்கிறதா? அல்லது மக்களை மதத்திற்காக கொடுமை செய்து தண்டனை, கொலைகள் போன்றவற்றை நடத்துகின்றனவா? என்பதை கணக்கில் வைத்து சில நாடுகளின் பட்டியலை கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

அந்த ஆணையம் வெளியிடும் அறிக்கையை வைத்து அமெரிக்கா உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரம் குறித்து பட்டியலிட்டு வெளியிடுகிறது. சமீபத்தில் அந்த ஆணையத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில், மத சுதந்திரத்தில் அதிக கவலைக்குரிய நாடாக இந்தியா இருக்கிறது.

ஆனால், அமெரிக்காவின் பட்டியலில், மத சுதந்திரத்தில் “அதிக கவலைக்குரிய” நாடுகளாக சீனா, பாகிஸ்தான் போன்ற 12 நாடுகள் இருக்கின்றன. இந்த பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியா, தற்போது “கவலைக்குரிய நாடுகள்” பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் தெரிவித்ததாவது, உலகினுடைய மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருக்கிறது. அங்கு பல வகையான மதங்களை கடைபிடிக்கும் மக்கள் வாழ்கிறார்கள். சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான எங்களின் வருட அறிக்கையில் இந்தியா குறித்து வருந்தத்தக்க விதமான சில தகவல்களை கவனத்தில் வைத்திருக்கிறோம். இந்தியா உட்பட பல நாடுகளில் மதம் சுதந்திரம் குறித்த சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.