வீடியோ : 6 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை…… ஸ்டெம்பை தெறிக்க விட்ட அல்சாரி ஜோசப்..!!

மும்பை அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கிய  அல்சாரி ஜோசப் ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.  

ஐ.பி.எல் கிரிக்கெட்  தொடரில் ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற  19 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், புவனேஷ்வர்குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது  . இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் மும்பை அணியில் புதிதாக களமிறங்கிய வேஸ்ட் இண்டீசை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அல்சாரி ஜோசப், தொடக்கத்தில் இருந்தே அபாரமாக பந்து வீசி தொடக்க வீரர் , டேவிட் வார்னர், விஜய் சங்கர், தீபக் ஹூடா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.அல்சாரி ஜோசப் 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் 2008 ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சோஹைல் தன்வீர்,  சென்னை அணிக்கு எதிராக 4 ஓவர் வீசி 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3வது இடத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஆடம் சம்பா, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவர்  வீசி 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

 

 

https://twitter.com/Seithi_solai/status/1114608972617543680