எந்த சந்தேகம் நாலும் கேளுங்க…. அலுவலர்களுக்கு பயிற்சி…. அதிகாரிகளின் ஆய்வு….!!

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எந்த வித சந்தேகம் இருந்தாலும் நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பணிபுரிய இருக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் துணை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மற்றும் பார்வையாளர் வி.சாந்தா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தேவையான படிவங்களை பூர்த்தி செய்து பின் வாக்குப்பதிவு முடிந்தவுடன் பெட்டிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் பணிகளை எளிதாக கொள்ள வேண்டும் எனவும், அலுவலர்கள் அனைவரும் வெளிப்படை தன்மையுடன் பணிபுரிய வேண்டும் எனவும் கலெக்டர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பணிகள் அனைத்தையும் முறையாக முன்கூட்டியே தயார் படுத்தி சரி செய்து கொள்ள வேண்டும் எனவும், வாக்குப்பதிவு குறித்த எந்தவித சந்தேகம் இருந்தாலும் இந்த பயிற்சி வகுப்பில் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். அதன்பின் வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் மண்டல அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பின்னர் மண்டல அலுவலரிடம் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி முறையாக தெரிந்து கொண்டு பயிற்சி பெறும் அலுவலர்கள் அடுத்த பயிற்சி வகுப்பில் கீழ்நிலையில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவை எந்த வித பிரச்சினைகளும் இன்றி அனைத்து சந்தேகங்களையும் அலுவலர்கள் நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *