பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு வீடு ஒதுக்கீடு…. மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு…. கோர்ட் அதிரடி….!!!!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வீடுகள் வழங்கப் பட்டுள்ளது. அதன் பிறகு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதோடு மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து துறை அதிகாரிகள் கையாடல் செய்துள்ளனர். எனவே இவர்களின் மீது விசாரணை நடத்தி குற்றம் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது குற்றம் சம்பந்தமாக பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளரிடம் அளிக்க கூறியுள்ளதால் நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை என கூறப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் தகுதியற்ற நபர்களுக்கு வீடு ஒதுக்கீடு மற்றும் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் கையாடல் போன்ற பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் அடிக்கடி தொடரப்படுவதால், இந்த பிரச்சனையை தீவிரமாக கருத்தில் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் பிறகு சட்ட விரோதமான முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்த அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக 6 மாத காலத்திற்குள் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தயாரித்து ஊரக வளர்ச்சி துறை செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.