தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் 18ஆம் தேதி (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் ‘ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’யை காலை 11.00 மணிக்கு மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும், காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடக்க வேண்டியக் கட்டாய விதிகளைத் தவெக தலைமை வெளியிட்டுள்ளது.

  • மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குக் கலந்துகொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர்/சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அனுமதி இல்லை.

  • தலைவர் நிகழ்ச்சிக்கு வரும்போதும், முடித்துவிட்டுச் செல்லும்போதும், அவரது வாகனங்களை இருசக்கர வாகனம் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை.

  • பிளக்ஸ் பேனர், அலங்கார வளைவுகள், கொடிக் கட்டப்பட்ட கம்பிகள் ஆகியவற்றை உரிய அனுமதி பெறாமல் தேசிய நெடுஞ்சாலைகள்/பிற சாலைகளில் வைக்கக் கூடாது.

  • ஆம்புலன்ஸ், பொது மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.