CSK அணியில் இருந்து விலகிய “டேவிட் வில்லே”….. காரணம் என்ன தெரியுமா…?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து  ஆல்ரவுண்டர் டேவிட் வில்லே விலகியுள்ளார். 

டேவிட் வில்லே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.. இவர் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியில் கடந்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியில் உள்ளார். இந்நிலையில் இவரது மனைவி கரோலின் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் காரணத்தால் டேவிட் வில்லே மனைவியுடன் சேர்ந்து இருக்க முடிவு செய்துள்ளார். ஆகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதாக டேவிட் வில்லே சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்கிடம் தெரிவித்துள்ளார்.

Image result for David Willie

அதில் நங்கள் எங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த நேரத்தில் நான் என் மனைவியுடன் சேர்ந்து இருக்க முடிவு செய்துள்ளேன். ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது எளிதான முடிவு கிடையாது. அணியில் இருந்து விலகுவது வருத்தம் அளிக்கிறது இருந்தாலும் குடும்பம் தான் முக்கியம் என்ற நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்று டேவிட் வில்லே தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நெகிடி ஏற்கனவே காயம் காரணமாக சென்னை அணியில் இருந்து விலகியுள்ள நிலையில் தற்போது டேவிட் வில்லேவும் விலகியுள்ளதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.