இந்தியாவில் தாக்குதல் நடத்த isi 22 தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறை பயிற்சி அளித்து வருகிறது.
காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவிற்கு தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை அளித்தது. இதையடுத்து இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்ககில்,

22 ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பயிற்சி அளித்து வரும் வீடியோ காட்சிகளை ஆங்கில செய்தி ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த தீவிரவாதிகள் ஊடுருவி முக்கிய இடங்களை குறி வைத்து தாக்குதல் தொடுக்கப்படலாம் என்று இந்திய உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து எல்லைப் பகுதி இராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.