ALERT : 5 நாள்கள் அடித்து வெளுக்கும் மழை….. வானிலை ஆய்வு மையம்…..!!!

தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *