ALERT: ரூ.1000 அபராதம்…. அரசு அதிரடி உத்தரவு……. உடனே இத செய்யுங்க…..!!!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவித்தது. இதற்கான காலக்கேடு பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியதால் இந்த கால அவகாசத்தை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்தது. அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பெரும்பாலானவர்களால் இணைக்க முடியாத சூழல் நிலவியது. அதனால் ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஆதார் கார்டை, பான் எண்ணுடன் இணைக்காமல் உள்ளனர்.

எனவே ஆதார்- பான் இணைக்காதவர்கள் வருகிற ஜூன் 30 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அவ்வாறு இணைக்க தவறவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி 2023 மார்ச் 31க்குள் இணைத்து முடிக்க வேண்டும். அப்படி இணைக்காத பட்சத்தில் பான்கார்டு செயலிழந்து விடும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *