ALERT : இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்….. வானிலை எச்சரிக்கை…..!!!!

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது . கேரளாவில் இதனால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .

இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், நாளை எர்ணாக்குளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. காசா்கோடு மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலா்ட் விடப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு அதிகமாக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்வதை குறிக்கும் முன்னறிவிப்பு ஆகும். ஆரஞ்சு அலர்ட் என்றால் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்வதை குறிக்கும். 6 முதல் 11 செமீ வரை அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்பு இருந்தால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *