அண்மையில் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது லாக்கரை புதுப்பிப்பதற்கு கெடு விதித்து இந்திய ரிசர்வ் வங்கியானது அறிவிப்பு வெளியிட்டது. அதாவது வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் அதன் லாக்கர் வசதியினை பயன்படுத்துபவர்களுக்கு, புது அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் தற்போது அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

kYC தகவலில் எந்த மாற்றமும் இல்லை என்றால், reKYC செயல்முறையை முடிக்க கணக்கு  வைத்திருப்பவர்களின் சுய அறிக்கை போதுமானது என ஆர்பிஐ தெளிவுபடுத்தி உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் இமெயில், மொபைல், ஏடிஎம், ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் கணக்குடன் இணைக்கப்பட்டதற்கான சுய விபரத்தை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குமாறும், இதை இரண்டு மாதங்களுக்குள் உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.