ALERT: அதிமுக பொதுக்குழுவில்…. கொரோனா விதிகளை மீறினால் வழக்குபதிவு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வெடித்தது. இந்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இதனிடையே தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருகிறது. இதனால் பொது இடங்களில் முக கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்ஃபி ஜான், அதிமுக பொது குழுவில் கொரோனா விதிமுறைகளை மீறினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *