“அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர்” திடீரென நேர்ந்த கொடுமை…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!!

அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி இந்திரா நகரில் பரோட்டா மாஸ்டரான சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு திருவள்ளூர் தேரடி அருகே உள்ள கடை முன்பு படுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அவர் உயிரிழந்து கிடப்பதை பார்த்து திருவள்ளூர் டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *