இவன் மேல சந்தேகமா இருக்கு… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூர் சாலையில் அவிநாசி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பகுதியில் வசித்து வரும் கருப்புசாமி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் சட்டவிரோதமாக 5 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கருப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *