கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காகிதப்பட்டறை பகுதியில் வைத்து மது விற்பனை செய்துகொண்டிருந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் ஓல்ட் டவுனை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தரமூர்த்தியை கைது செய்ததோடு அவரிடமிருந்து 140 மது பாட்டில்களையும் அறிமுகம் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.