சாராயம் விற்பனை…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!!

சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகபட்டினம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அமைந்துள்ள சன்னதி தெருவில் வைத்து சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் ராமசாமி என்பவரின் மகன் பிரகாஷ் சாராயம் விற்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷை கைது செய்ததோடு விற்பனைக்காக அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *