வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பனை…. வசமாக சிக்கிய பெண்…. கைது செய்த காவல்துறையினர்….!!

தடையை மீறி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள லாலா பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் பஞ்சப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மலர் என்ற பெண் தனது வீட்டின் பின்புறமுள்ள பகுதியில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மலரை கைது செய்ததோடு விற்பனைக்காக அவரிடமிருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.