மது பாட்டில்கள் விற்பனை… கையும் களவுமாக சிக்கி கொண்ட பெண்… கைது செய்த காவல்துறையினர்…!!

தடையை மீறி மது விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வைத்து பெண் ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.

அதில் அங்கு வைத்து மது விற்பனை செய்து கொண்டிருந்த பெண் ரங்கம்பாளையம் பகுதியில் வசித்து வரும் வளர்மதி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக வளர்மதியை கைது செய்ததோடு விற்பனைக்காக அவர் வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *